திருப்பணியும் ஸ்ரீலஸ்ரீ மகா ஆனந்த சித்தர் ஸ்வாமிகளும் :-

சிவபெருமான் இட்ட கட்டளையால் இம்மலையின்கண் வந்தடைந்த மகா ஆனந்த சித்தர் ஸ்வாமிகள் இத்திருத்தலத்திற்கு வருகை புரியும் பக்தர்களைக் காத்தும், அருளாசி வழங்கியும், அவர்களின் குறைகள், நோய்ப்பிணிகளை நீக்கியும் அவர்களுக்கும் இகர இன்பங்களையும் அளித்து வருவதுடன் பக்தர்கள் மூலமூர்த்தியை எளிதாக வழிபட வேண்டி 16 கால் மண்டபத்தில் இருந்து திருத்தலம் வரை திருப்படிகள் அமைத்தும், 16 கால் மண்டபத்தினை அதிநூதன முறையில் எழுப்பியும், திருத்தலதில் பல்வேறு வகையான திருப்பணி வேலைகளைச் செய்தும், ஒருவரும் நினைத்துப் பார்க்க இயலாத்தும், செய்ய இயல முடியாத்துமாகிய 1500 கிலோ எடை மிக்கதும், மிக நுட்பமான வேலைப்பாடு மிகுந்ததுமாகிய தென்முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தியை இறைவனின் அருட்செயலால் அச்சிலை விக்கிரகத்தை மலைக்குக் கொண்டு சென்று சிவபெருமான் தனக்கு இட்ட கட்டளையின்படி பிரதிஷ்டை செய்து, மலையைக் குடைந்து தியான மண்டபத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் அமைத்து, சித்தர்களை நினைவுசுறும் வகையில் பதிணென் சித்தர்சளை கற்பாறையிலேயே வடித்த பெருமகாசித்தர் எனும் பெருமைக்குரியவர் மகா ஆனந்த சித்தர் ஆவார்.

ஸ்ரீலஸ்ரீ மகா ஆனந்த சித்தரும் அன்னதானமும்:-

தான் ஒரு பருக்கை சோறு உட்கொள்ளாவிடினும், நித்தமும் நூற்றுக்கணக்கான பேர்களுக்கு அறுசுவை உணவு தம் திருக்கரங்களாலேயே தயாரித்து வழங்குகிறார்.

                    Designed by websitevendum.com