ஸ்ரீலஸ்ரீ மகா ஆனந்த சித்தரும் சித்தவைத்தியமும் :-

மானிட இனத்துக்கும் பெருமக்கள் வழங்கிய அரிய நன்கொடை சித்த மருத்துவம். நம் மகானந்த சித்தர் அவ்வரிசையில் அபூர்வ மூலிகைகளை போகர் சித்தர் திருவருளால் அறியப்பெற்று தீராத வியாதிகளை தீர்த்து வைக்கிறார். யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய முப்பெரும் சிறப்பு வாய்க்கப்பெற்றவர் நம் மகா ஆனந்த சித்தர். அரிய மூலிகை மருந்துகளால் வாய்பேச நிலையினர் குணம்பெற்றுள்ளனர். பிள்ளைப்பேறு இல்லாதோர் மகா ஆனந்த சித்தரை அணுகி வேண்ட ஸ்வாமிகள் இறைவனின் அருட்சக்தியாலும் தன் தவவலியாலும் வில்வம், விபூதி, மருந்து அளித்தால் மலடு நிங்கி மகப்பேறு அடைகின்றனர்.இலவச மருத்துவசேவை:-

பெருவாரியான மக்கள் பயன்பெறும் பொருட்டு மாதமொருமுறை இங்கு இலவச மருத்துவசேவை நடத்தப்பெறுகிறது. மனிதநேயமிக்க மருத்துவர்கள் பலர் இப் புண்ணியப்பணியில் பங்கு பெறுகின்றனர்.
 

                    Designed by websitevendum.com